பயிற்சி நிலையம்
தமிழ்நாடு பட்டுவளர்ச்சி பயிற்சி நிலையம், ஓசூர்
பட்டுவளர்ச்சித் துறையின் களப்பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும் புதிய விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கு பயிற்சியும் தொடர்ந்து வழங்கப்படுவதற்காக பட்டுவளர்ச்சித் துறை ஒசூரில் அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் உறைவிட வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி நிலையத்தினை 1973 ஆம் ஆண்டில் ஓசூரில் நிறுவப்பட்டது..
‘பட்டு மலர்’ எனும் மாதாந்திர தொழில்நுட்ப இதழ் இப்பயிற்சி நிலையம் மூலம் அச்சிடப்பட்டு இதழ் ஒன்றிற்கு ரூ.2/- என்ற மானிய விலையில் பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. பட்டுவளர்ச்சிக்கு உதவிடும் வகையில் காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்கள், மேம்பாடுகள் குறித்து பட்டு விவசாயிகள் அறிந்துகொள்ள இது துணை புரிகிறது.
படிப்புகள்
1. உற்பத்தித்திறன் மேம்பாட்டு பயிற்சி (பைவோல்டின் பயிர்கள்)– for Dept. staff
2. மல்பெரி சாகுபடி நுட்பங்கள் மற்றும் மல்பெரி நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
3. இளம் வயது பட்டுப்புழு வளர்ப்பு நுட்பங்கள்
4. தாமதமான வயது பட்டுப்புழு வளர்ப்பு நுட்பங்கள்
5. பட்டுப்புழு நோய்கள் & மேலாண்மை
6. பைவோல்டின் பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் புதிய பட்டு உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி.
7. CDP திட்டம் மற்றும் கிளஸ்டர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் - புதிய செரி சாகுபடி நிபுணர்களுக்கு பயிற்சி.