என் வாழ்வை வளமாக்கிய பட்டுத்தொழில்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், புத்தகரம் கிராமத்தில் வசித்து வரும் திரு.பாரதி த/பெ.முனியன் ஆகிய நான் என்னுடைய நிலத்தில் நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிர் வகைகளை பயிரிட்டு வந்தேன். எனக்கு நிலையான வருhமனம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் பட்டு வளர்ச்சித்துறை வழிகாட்டுத்தலின் மூலம் பட்டுத்தொழில் குறித்து அறிந்து, பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் , மானியம் அறிந்து இத்தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். 05.06.2019 அன்று 1.00 ஏக்கர் அளவில் வி1 ரக மல்பெரி நாற்றுகளை நடவு செய்தேன். அதற்காக மாநில திட்டத்தின் கீழ் ரூ.10,500/- நடவு மானியமாக பெற்றேன்.
புழு வளர்ப்பு மனை 52x21 என்ற அளவில் 1,092 சதுரஅடியில் ரூ.3,00,000/- செலவில் அமைத்துள்ளேன். அதற்கு ரூ.87,500/- மாநில திட்டத்தில் மானியமாக பட்டு வளர்ச்சித்துறையிலிருந்து பெற்றுள்ளேன். மேலும் பட்டு புழு வளர்ப்பில் தேவைப்படும் உபகரணங்கள் ரூ.52,500/- மதிப்பில் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டது.
தற்போது ஆண்டிற்கு 975 பட்டு முட்டைத்தொகுதிகள் வளர்த்து 854.900 கிலோ பட்டுக்கூடு அறுவடை செய்கிறேன். இதன்மூலம் எனக்கு ஆண்டிற்கு ரூ.2,63,894/- வருமானம் பெற்று சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளேன். மேலும் 1.00 ஏக்கல் மல்பெரி சாகுபடி செய்து, ஆண்டுக்கு 1,000 பட்டு முட்டைத் தொகுதிகள் வளர்க்க ஆர்வமாக உள்ளேன். எனது பிள்ளைகளுக்கு நல்லதொரு கல்வியையும் வழங்கியுள்ளேன் என மனமகிழ்வுடன தெரிவித்துக் கொள்கிறேன்.
வ.எண் | வருடம் | பட்டு முட்டை தொகுதிகள் | அறுவடை செய்த பட்டுக்கூடுகள் கி.கி | வருமானம் ரூ. |
1 | 2019–20 | 850 | 670.000 | 2,34,500.00 |
2 | 2020-21 | 975 | 854.900 | 2,63,894.00 |
3 | 2021-22 ஜீன் 21 முடிய | 450 | 334.00 | 1,29,506.00 |
| மொத்தம் | 2,275 | 1,858.900 | 6,27,900.00 |
திரு.பாரதி த/பெ. முனியன், விழுப்புரம், செல்.9585695137.