மத்திய அரசின் மானியத் திட்டங்கள்

1. பெரிய அளவிலான இளம்புழுவளர்ப்பு மையம் அமைக்க உதவியளித்தல்

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.12,00,000/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.10,80,000/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.9,00,000/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1. குறைந்தபட்ச கல்வி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
2. இளம்புழுவளர்ப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பயிற்சி எடுத்துக்கொள்ள விருப்பமுள்ளவராக இருத்தல்வேண்டும்
3. நடவு பரப்பு குறைந்தபட்சம் 2.00 ஏக்கர் சொட்டுநீர்ப்பாசனத்துடன்
4. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 மல்பெரி நாற்றுகள், பரப்பிற்கு ஏற்ப நடவு செய்திருத்தல் வேண்டும்.
5. குறைந்ததது 4-6 பயிற்சி மற்றும் அனுபவம் உள்ள பணியாளர்கள் இருத்தல் வேண்டும்.
6. இளம்புழு வளர்ப்பு மனை 1200 ச.அடி மேல் அமைத்திருத்தல் வேண்டும்.
7.பட்டு முட்டை அடைகாக்கும் கருவி மற்றும் அதற்கென தனி அறை இருத்தல் வேண்டும்.
8.வருடத்திற்கு குறைந்ததது 1.50-1.60 இலட்சம் பட்டு முட்டைகள் வளர்ப்பு செய்து இளம்புழுக்கள் விநியோகம் செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.மல்பெரி தோட்டம், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்ததற்கான புகைப்படம், புழுவளர்ப்பு மனை கட்டடத்தின் தரைமட்ட நிலை, லிண்டல் நிலை, முழுநிலை மற்றும் இளம்புழுவளர்ப்பு தளவாடங்களுடன் பயனாளியின் புகைப்படம்
3. இளம்புழு வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்
4. பட்டா/ சிட்டா
5. இ-அடங்கல்/ அடங்கல்
6.ஆதார்அட்டை/ குடும்ப அட்டை நகல் (சுயசான்றுடன் 2 நகல்கள்)
7. வங்கி கணக்கு புத்தக நகல்
8.சாதி சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் மட்டும்)
9.பதிவு பெற்ற கட்டட பொறியாளரின் மதிப்பீட்டு சான்றிதழ் மற்றும் கட்டட வரைபடம்
10. சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தற்கான மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ததற்கான இரசீதுகள்
11.ரூ.100/-மதிப்பிலான பிணைய பத்திரம்

crc


2. பட்டு பல்நோக்கு மையம் அமைக்க உதவியளித்தல்

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.1,75,000/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1,57,500/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.1,31,250/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.குறைந்தபட்ச கல்வி தகுதி - பட்டபடிப்பு முடித்திருத்தல் வேண்டும்
2.பட்டு பல்நோக்கு ஆலோசனை மையம் அமைக்க தேவையான பயிற்சி பெற்றவராக (அ) பயிற்சி பெற விருப்பமுள்ளவராக இருத்தல் வேண்டும்
3.இரு சக்கர வாகனம் வைத்திருத்தல் வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1. பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2. கட்டடத்துடன் சொந்த நிலம்/ குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 5 வருட வாடகை ஒப்பந்தத்துடன்) இருத்தல் வேண்டும்
3. பட்டு பல்நோக்கு ஆலோசனை மையத்திற்கான தளவாடங்களுடன் பயனாளியின் புகைப்படம்
4. பயிற்சி சான்றிதழ் / கல்வி தகுதி சான்றிதழ்
5. பட்டா/ சிட்டா
6. இ-அடங்கல்/ அடங்கல்
7.ஆதார்அட்டை/ குடும்ப அட்டை நகல் (சுயசான்றுடன் 2 நகல்கள்)
8. வங்கி கணக்கு புத்தக நகல்
9. சாதி சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் மட்டும்)
10. பொருட்கள் கொள்முதல் செய்ததற்கான இரசீதுகள்
11. வாகன பதிவு சான்று நகல்
12. ரூ.100/-மதிப்பிலான பிணைய பத்திரம்

Polyclinic


3. பட்டு முறுக்கேற்றும் அலகுகள் நிறுவிட உதவியளித்தல் (480 கதிர்கள்)

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.9,74,400/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.8,76,960/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.7,30,800/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.பட்டுநூற்பு வைத்திருத்தல் வேண்டும்
2. 1800 ச.அடி. பரப்பில் கட்டடத்துடன்சொந்தநிலம்/குத்தகைநிலம் (குறைந்தபட்சம் 5 வருடவாடகைஒப்பந்தத்துடன்) இருத்தல்வேண்டும்
3.மும்முனைமின்இணைப்புசேவைபெற்றிருத்தல்வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1. பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.ஆதார் அட்டை நகல்
3.வங்கி கணக்கு புத்தக நகல்
4.நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்கள்

Twisting


4. தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட உதவியளித்தல் (200 முனைகள்)

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.79,83,000/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.71,84,700/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.59,87,250/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.பட்டுநூற்பு தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்
2. 7500 ச.அடி பரப்பில் கட்டடத்துடன் சொந்தநிலம் இருத்தல் வேண்டும்
3.மும்முனை மின்இணைப்பு சேவை பெற்றிருத்தல் வேண்டும்
4.நாளொன்றிற்கு 30000 லிட்டர் நீர் பயன்படுத்தும் வகையில் நீர் வசதி இருத்தல் வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.ஆதார் அட்டை நகல்
3.நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்கள்

ARM-96c95


5. தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட உதவியளித்தல் (400 முனைகள்)

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.1,41,02,000/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1,26,91,800/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.1,05,76,500/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.பட்டுநூற்பு தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்
2.15000 ச.அடி பரப்பில் கட்டடத்துடன் சொந்தநிலம் இருத்தல் வேண்டும்
3.மும்முனை மின் இணைப்பு சேவை பெற்றிருத்தல் வேண்டும்
4.நாளொன்றிற்கு 50000 லிட்டர் நீர் பயன்படுத்தும் வகையில் நீர் வசதி இருத்தல் வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச் சீட்டு அளவிலான வண்ணபுகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.ஆதார் அட்டை நகல்
3.நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்கள்

ARM


6. பலமுனை பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட உதவியளித்தல் (10 ஏனங்கள்)

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.16,74,800/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,07,320/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.12,56,100/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.பட்டுநூற்பு தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்
2.2400 ச.அடி பரப்பில் கட்டடத்துடன் சொந்தநிலம் / குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 5 வருட வாடகை ஒப்பந்தத்துடன்) இருத்தல் வேண்டும்
3.மும்முனை மின்இணைப்பு சேவை பெற்றிருத்தல் வேண்டும்
4.நாளொன்றிற்கு 15000 லிட்டர் நீர் பயன்படுத்தும் வகையில் நீர் வசதி இருத்தல் வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.ஆதார் அட்டை நகல்
3. வங்கி கணக்கு விவரங்கள்
4.நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்கள்

MRM


7. விவசாயிகள் அளவில் மல்பெரி நாற்றாங்கால் அமைக்க உதவியளித்தல்

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.1,50,000/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1,35,000/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.1,12,500/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும்
2.நல்ல பாசன நீர் வசதி இருத்தல் வேண்டும்
3.ஏக்கருக்கு 1,28,000 நாற்றுகள் வீதம் பரப்பிற்கேற்ப நடவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
4.நடவு பரப்பு - குறைந்தபட்சம் - 0.50 ஏக்கர்

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.3 மாத வயதுடைய மல்பெரி நாற்றுகளுடன் மல்பெரி நாற்றாங்காலின் புகைப்படம்
3.பட்டா மற்றும் சிட்டா
4.இ-அடங்கல் / அடங்கல்
5.ஆதார்அட்டை /குடும்ப அட்டை நகல் (சுயசான்றுடன் - 2 நகல்கள்)
6.வங்கி கணக்கு புத்தக நகல்
7.நாற்று விற்கப்பட்டதற்கான விற்பனை பட்டியல்
8.சாதிச் சான்றிதழ் (சுயசான்றுடன் - 2 நகல்கள்)
9.ரூ.100/- மதிப்பிலான பிணைய பத்திரம்

Kisan-Nursery


8. தானியங்கி டூப்பியான் பட்டு நூற்பு அலகு நிறுவிட உதவியளித்தல் (142 முனைகள்)

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.38,69,744/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.34,82,770/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.29,02,308/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1.பட்டுநூற்பு தொடர்பானஅடிப்படைஅறிவு உள்ளவராக இருத்தல் வேண்டும்
2.கட்டடத்துடன் சொந்த நிலம் இருத்தல் வேண்டும்
3.மும்முனை மின் இணைப்பு சேவை பெற்றிருத்தல் வேண்டும்
4.நாளொன்றிற்கு 25000-30000 லிட்டர் நீர் பயன்படுத்தும் வகையில் நீர்வசதி இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.ஆதார் அட்டை நகல்
3. நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்கள்

adrm


9. கூட்டுப்புழு பதப்படுத்தும் அலகு நிறுவிட உதவியளித்தல்

மானியம்

75-90%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.19,67,000/-ல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.17,70,300/- மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.14,75,250/- மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1. 6000 ச. அடி பரப்பில் கட்டடத்துடன் சொந்த நிலம் இருத்தல் வேண்டும்
2.மும்முனை மின் இணைப்பு சேவை பெற்றிருத்தல் வேண்டும்
3. போதிய நீர்வசதி இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம்
2.ஆதார் அட்டை நகல்
3.நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்கள்

Pupae