மாநில அரசின் மானியத் திட்டங்கள்

1. வீரிய இரக மல்பெரி நடவு செய்ய உதவியளித்தல்

மானியம்

75%

திட்ட விவரம்

ஒரு ஏக்கர் அலகு மதிப்பு ரூ.14,000/-ல் ரூ.10,500/-மானியமாக வழங்கப்படும்.

தகுதி

1. நல்ல பாசன நீர் வசதி இருத்தல் வேண்டும்
2. வீரிய இரக மல்பெரி நடவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் (வீ1, எம்.ஆர்2, எஸ் வரிசை மற்றும் ஜீ4)
3. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 மல்பெரி நாற்றுகள் வீதம் பரப்பிற்கேற்ப நடவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
4. இனை வரிசை முறையில் நடவு செய்யப்பட்டிருக்க வேண்டும் [(5 + 3) x 2]
5. நடவு பரப்பு - குறைந்தபட்சம் – 1.00 ஏக்கர் மற்றும் அதிகபட்சம் – 5.00 ஏக்கர்

தேவையான ஆவணங்கள்

1. பயனாளியின் கடவுச் சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2. பயனாளியுடன் மல்பெரி தோட்டத்தின் புகைப்படம்
3. பட்டா மற்றும் சிட்டா
4. இ-அடங்கல்/ அடங்கல்
5. ஆதார் அட்டை/குடும்ப அட்டை நகல் (சுய சான்றுடன் – 2 நகல்கள்)
6. வங்கி கணக்கு புத்தக நகல்
7. சாதிச்சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினோர் மட்டும்)

High_Yielding_Mulberry


2. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்ட உதவியளித்தல்

மானியம்

30%

திட்ட விவரம்

அலகு மதிப்பு ரூ.4,00,000/-ல் ரூ.1,20,000/- மானியமாக வழங்கப்படும்

தகுதி

1.நடவு பரப்பு - குறைந்தபட்சம் - 1.00 ஏக்கர்
2.ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 மல்பெரி நாற்றுகள் வீதம் பரப்பிற்கேற்ப நடவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
3.இணை வரிசை முறையில் நடவு செய்யப்பட்டிருக்க வேண்டும் [(5 + 3) x 2]
4.புழுவளர்ப்பு மனை அளவு 1000 ச.அடிக்கு மேல் இருத்தல் வேண்டும்
5.வருடத்திற்கு குறைந்தது 4 முதல் 5 புழுவளர்ப்புகள் மேற்கொள்ள வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1. பயனாளியின் கடவுச் சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2. மல்பெரி தோட்டம், புழுவளர்ப்பு மனை கட்டடத்தின் தரைமட்ட நிலை, லிண்டல் நிலை, முழுநிலை - உட்புறம் (ம) வெளிப்புற புகைப்படங்கள்
3. பட்டா மற்றும் சிட்டா
4. இ-அடங்கல்/ அடங்கல்
5. ஆதார் அட்டை/குடும்ப அட்டை நகல் (சுய சான்றுடன் - 2 நகல்கள்)
6. வங்கி கணக்கு புத்தக நகல்
7. சாதிச்சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினோர் மட்டும்)
8. பதிவு பெற்ற கட்டிட பொறியாளரின் மதிப்பீட்டு சான்றிதழ் மற்றும் கட்டிட வரைபடம்
9. ரூ.100/- மதிப்பிலான பிணைய பத்திரம்

shed


3. நவீன புழுவளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குதல்

மானியம்

75%

திட்ட விவரம்

பட்டு விவசாயிகளுக்கு நவீன புழுவளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ரூ.52,500/- மதிப்பில் கொள்முதல் செய்து வழங்கப்படும்

தகுதி

1.வருடத்திற்கு குறைந்தது 4 முதல் 5 புழுவளர்ப்புகள் மேற்கொள்ள வேண்டும்
2.புழுவளர்ப்பு மனையில் ரூ.17,500/- மதிப்பில் புழுவளர்ப்புத் தாங்கிகள் அமைத்திருக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச் சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.மல்பெரி தோட்ட புகைப்படம் மற்றும் புழுவளர்ப்பு தாங்கிகளுடன் புழுவளர்ப்பு மனையின் உட்புற புகைப்படம்
3.பட்டா மற்றும் சிட்டா
4.இ-அடங்கல்/ அடங்கல்
5.ஆதார் அட்டை/குடும்ப அட்டை நகல் (சுய சான்றுடன் - 2 நகல்கள்)
6.வங்கி கணக்கு புத்தக நகல்

7.சாதிச்சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினோர் மட்டும் - சுய சான்றுடன் - 2 நகல்கள்)
8.ரூ.100/- மதிப்பிலான பிணைய பத்திரம்
9.புழுவளர்ப்புத் தாங்கிகள் அமைத்த வகையில் மேற்கொள்ளப்பட்ட செலவினத்திற்கான இரசீது

All-appliances


4. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்குதல்

மானியம்

திட்ட விவரம்

மாநில மற்றும் மாவட்ட அளவில் வெண்பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் பட்டுவிவசாயிகளுக்குஊக்குவிக்கும் வகையில் ரொக்கப்பரிசுத் தொகை வழங்கப்படும்.

தகுதி

1.நடவுபரப்பு - குறைந்தபட்சம் - 1.00 ஏக்கர்
2. கணக்கீடு செய்யப்படும் ஆண்டில் ஒரு ஏக்கரில் அதிகபடியான புழுவளர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பட்டுக்கூடு அறுவடை எய்திருத்தல் வேண்டும்
3.அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் பட்டுக்கூடு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

1.பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.மல்பெரி தோட்டம் மற்றும் புழுவளர்ப்புமனையின் புகைப்படம்
3.ஆதார் அட்டை / குடும்ப அட்டை நகல் (சுயசான்றுடன் - 2 நகல்கள்)
4.வங்கி கணக்கு புத்தக நகல்
5.பட்டு விவசாயிகள் அனுமதி புத்தகத்தின் நகல்
6.இளம்புழுவளர்ப்பு மையம்/ பட்டுமுட்டை வித்தகம் மற்றும் பட்டு கூடு அங்காடி இரசீதுகள்
7.சாதிச்சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினோர் மட்டும் - சுயசான்றுடன் - 2 நகல்கள்)

Cash-Award-Farmer


5. மாநில அளவில் சிறந்த பட்டு நூற்பாளர்களுக்கு (பலமுனை (ம) தானியங்கி பட்டு நூற்பாளர்கள்) ரொக்கப் பரிசு வழங்குதல்

மானியம்

திட்ட விவரம்

மாநில அளவில் சிறந்த பட்டு நூற்பாளர்களுக்கு (பலமுனை (ம) தானியங்கி பட்டு நூற்பாளர்கள்) ரொக்கப் பரிசு வழங்கப்படும்

தகுதி

1. பட்டு நூற்பகத்தின் ஏனங்களின் திறனிற்கு எற்ப பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்து தரமான கச்சா பட்டு நூல் உற்பத்தி செய்திருத்தல் வேண்டும்
2. மாநிலத்தில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிகளிலிருந்து பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அரசு அண்ணா பட்டு பரிமாற்றகத்தில் கச்சா பட்டு நூல் பரிமாற்றம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்

தேவையான ஆவணங்கள்

1. பயனாளியின் கடவுச்சீட்டு அளவிலான வண்ண புகைப்படம் ஒட்டப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
2.பட்டு நூற்பு மனையுடன் பட்டு நூற்பாளரின் புகைப்படம்
3.ஆதார் அட்டை /குடும்ப அட்டை நகல் (சுயசான்றுடன் - 2 நகல்கள்)
4.வங்கி கணக்கு புத்தக நகல்
5.பட்டு நூற்பாளர்ள் அனுமதி புத்தகத்தின் நகல் (சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் மற்றும் அண்ணா பட்டு பரிமாற்றக துணை இயக்குநரால் வழங்கப்பட்டது)
6. பட்டுகூடு அங்காடி மற்றும் அண்ணா பட்டு பரிமாற்றக இரசீதுகள்
7.சாதிச்சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினோர் மட்டும் - சுயசான்றுடன் - 2 நகல்கள்)

Cash-Award-Reeler