அறிவிப்பு பலகை
சீர்மிகு தலைமை
பணி
பட்டுத் துறையின் சுயசாா்பு மற்றும் நிலையான வளர்ச்சி
கிராமப்புற மற்றும் துணை நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மூலம் வறுமை ஒழிப்பு
பட்டு உற்பத்தியில் தன்னிறைவை அடைவது
பார்வை
மல்பெரி சாகுபடியின் பரப்பளவை அதிகரிக்கவும் மற்றும் பட்டு வளர்ப்பில் அதிக விவசாயிகளை ஈடுபடுத்தவும்
இறக்குமதிக்கு மாற்றாக, சர்வதேச தர பைவோல்டின் பட்டு உற்பத்தி
துறையின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது
சேவைகள்
பட்டு வளர்ப்பில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவித்தல், அதிக மகசூல் தரும் மல்பெரி வகைகளை நடவு செய்தல் மற்றும் பைவோல்டின் பட்டுப்புழு வளர்ப்பை மேற்கொள்ளுதல்
பட்டு நூற்பு தொழில்முனைவோரை உருவாக்குதல்
பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு நூற்பு தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல்
பட்டுகூடு மற்றும் மூல பட்டு விற்பனைக்கு சந்தை வழிகளை வழங்குதல்
துறை உள்கட்டமைப்பு
விதை பண்ணைகள்
இத்துறையில் 19 விதை பண்ணைகள் பட்டுப்புழு விதை உற்பத்தியின் மூன்று அடுக்கு பராமரிப்பு முறையில் பட்டுப்புழு விதை உற்பத்தி, பட்டுப்புழு விவசாயிகளுக்கான வணிக விதை உற்பத்திக்கான அடிப்படை விதைகளை வழங்குவதற்காக ஈடுபட்டுள்ளன.
அரசு பட்டுப் பண்ணைகள்
துறையின் கீழ் 32 அரசு பட்டு பண்ணைகள் செயல்படுகின்றன. இந்த பண்ணைகள் செயல் விளக்கம் மற்றும் பயிற்சி மையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன, தேவைப்படும் விவசாயிகளுக்கு தரமான மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் சாக்கி பட்டுப்புழுக்களை வழங்குகின்றன.
வித்தகங்கள்
வித்தகங்கள்எனப்படும் பட்டுப்புழு விதை உற்பத்தி மையங்கள் பட்டு வளர்ப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. கீழ்க்கண்ட 13 வித்தகங்கள் மூலம் பட்டுப்புழு விவசாயிகளுக்கு நோயற்ற பட்டுப்புழு முட்டைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
பல்நிலை குளிர்பதனஅலகுகள்
பைவோல்டைன் பட்டுப்புழு முட்டைகள் குளிர்பதனப் பெட்டியில் பல்வேறு வெப்பநிலை நிலைகளில் பாதுகாக்கப்படுகின்றன. ஆண்டு முழுவதும் பைவோல்டைன் முட்டைகளைப் பாதுகாக்கவும் வழங்கவும், மூன்று பல்நிலை குளிர்பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியிலும் ஓசூரிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடன்பட்டியிலும் செயல்படுகின்றன.
தொழில்நுட்ப சேவை மையம்
மல்பெரி சாகுபடி, தோட்ட பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க, 105 தொழில்நுட்ப சேவை மையங்கள் மாநிலத்தில் செயல்படுகின்றன.
பட்டுகூடு அங்காடி
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுக் கூடுகளை வர்த்தகம் செய்ய ஏதுவாக துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 20 பட்டுக்கூடு அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான பட்டுக்கூடு ஏல நடவடிக்கைகளில் பட்டு நூற்பாளர்கள் பங்கேற்று பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்பட அங்காடிப் பணியாளர்கள் உதவுகின்றனர்.
அரசு அண்ணா பட்டுப் பரிமாற்றகம்
அண்ணா பட்டுப் பரிமாற்றகத்தில், மாநிலத்தில் உள்ள பட்டு நூற்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கச்சாப்பட்டுநூல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இப்பட்டுப் பரிமாற்றகம் 1991 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பட்டு பரிமாற்றகத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படும் பட்டுநூல் காஞ்சிபுரம், மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தால் பரிசோதனை செய்யப்படுகிறது.
டான்சில்க்
தமிழ்நாட்டிலுள்ள பட்டு கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைக் கூட்டுறவு இணையமாக, 1978-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது. இதன் கிளைகள் ஆரணி, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கும்பகோணம் மற்றும் சேலம் ஆகிய ஆறு இடங்களில் அமைந்துள்ளன. பட்டு நூற்பாளர்கள், முறுக்காளர்கள் மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
பயிற்சி நிலையம், ஓசூர்
பட்டுவளர்ச்சித் துறையின் களப்பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சியும் புதிய விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கு பயிற்சியும் தொடர்ந்து வழங்கப்படுவதற்காக பட்டுவளர்ச்சித் துறை ஒசூரில் அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் உறைவிட வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி நிலையத்தினை கொண்டுள்ளது.