கேள்வி பதில்கள்
ஒர் ஏக்கரில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட சுமார் ரூ.3,75,000/- கீழ் குறிப்பிட்டுள்ளவாறு தேவைப்படுகிறது.
மல்பெரி தோட்டம் அமைக்க | ரூ. 30,000 /- |
பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டிட (குறைந்த பட்சம்) | ரூ. 2,75,000 /- |
பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்ய | ரூ. 70,000 /- |
ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டில் 1000 முதல் 1500 பட்டு முட்டைகள் வரை வளர்ப்பு செய்யலாம்.
ஒரு ஏக்கர் மல்பெரி நடவு செய்து பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் செய்வதன் மூலம் விவசாயி ஒரு ஆண்டில் நிகர வருமானமாக ரூ.3,00,000/- பெற வாய்ப்புள்ளது.
சராசரியாக ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ஒரு ஏக்கரில் 1500 முட்டைத் தொகுதிகள் வளர்த்து சராசரி அறுவடை 80 கிகி பட்டுக்கூடுகள் வீதம் 1200 கிகி பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யலாம்.
பட்டு முட்டைத் தொகுதிகளை நேரிடையாக பெற்று பொரிப்பு செய்து புழுவளர்க்கும் முறையில் 5 - 6 முறை புழுவளர்ப்புகள் செய்யலாம். தற்பொழுது பட்டு விவசாயிகள் பட்டு முட்டைகளுக்கு பதில் இளம்புழுக்களை இளம்புழுவளர்ப்பு மையங்கள் மூலம் பெற்று வளர்ப்பதன் மூலம், மல்பெரி தோட்டத்தினை இரு பகுதிகளாக பிரித்து புழு வளர்ப்பு செய்யும் நடைமுறையினை பின்பற்றுவதால் ஆண்டுக்கு 10 முறை புழு வளர்ப்புகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
ஓரு ஏக்கர் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதாவது ஓரு ஏக்கரில் வருடத்திற்கு 300 வேலை நாட்கள் x 5 நபர்கள் = 1500 மனித நாட்கள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.